21ஆம் நூற்றாண்டு சீஷத்துவம்: பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தல்

கிறிஸ்துவுடனான உறவில் சந்தோஷத்தையும் பரவசத்தையும் அனுபவிப்பதில் உள்ள சவால்களைக் கண்டுகொண்டு, அவற்றை வேதத்தின் அடிப்படையில் கையாள உதவும் நடைமுறை பாடங்களைக் கொண்டது இந்தப் பாடத்தொடர்.

இந்தப் பாடம் அன்பின் விதிமுறைகளை வலியுறுத்தி, கோபத்தின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களை கையாளுவதற்கான வேதாகம வழிமுறைகளைக் கொடுக்கும்.

இந்தப் பாடம் பிறரை மன்னித்தல் மற்றும் பிறரிடமிருந்து மன்னிப்புப் பெற்றுக் கொள்ளுதலில் விசுவாசிக்கு இருக்கும் பொறுப்பில் உள்ள மீட்புக்கேதுவான பலன்களை எடுத்துக் காண்பிக்கும்.

இந்தப் பாடத்தின் ஆசிரியர் முறிந்து போன உறவுகள் எவ்வாறு நம் வாழ்வை எதிர்மறையாக பாதிக்கின்றன என்றும், ஆரோக்கியமான உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னவென்றும் விளக்குகிறார்.

இந்தப் பாடம் நீடிய பொறுமையின் பலன்கள் மற்றும் அதனை வளர்த்துக் கொள்ளுவதில் இருக்கும் தடைகளை எடுத்துச் சொல்லி, நீடிய பொறுமை என்னும் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதற்காக எடுக்க வேண்டிய முயற்சிகளை வலியுறுத்துகிறது.

இந்தப் பாடத்தின் ஆசிரியர் தேவன் தம் பிள்ளைகளாகிய நம் மீது கொண்ட அன்பினால் நம்மை சிட்சிக்கும் வழிகளை அடையாளம் காண்பிக்கிறார். மேலும் இந்தப் பாடம் நம் வாழ்வில் தேவன் செய்யும் கிரியைக்கு நம்மை ஒப்புவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக அவர் கொண்டுள்ள இலக்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

தோல்விக்கான காரணங்களை விளங்கிக் கொள்வதில் இந்தப் பாடம் குறிப்பாக கவனம் செலுத்துகிறது. இதன் ஆசிரியர் புதிய வாழ்வைத் தொடங்குதல் மற்றும் வாழ்வதற்கு அவசியமான கொள்கைகள் பற்றி விளக்குகிறார்.

இந்தப் பாடத்தில் ஆவிக்குரிய வரங்கள், அவற்றை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய காரியங்களைக் கற்றுக் கொள்ளுவீர்கள்.

இந்தப் பாடம் பணத்தைக் கையாளுவதற்கான கொள்கைகளை எடுத்துக் கூறி, தனிப்பட்ட நிதிகளைப் பற்றிய வேதாகமக் கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது.

இந்தப் பாடம் விசுவாசியின் வாழ்வில் பாடுகளினால் வரும் மெய்யான பலன்கள், தேவன் தம் பிள்ளைகளை சிட்சிக்க எவ்வாறு சில சமயம் பாடுகளை உபயோகிக்கிறார், மற்றும் கடினமான சூழல்களால் நம் விசுவாசத்தை அழிக்க சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான் என்பனவற்றிற்கு நம் கவனத்தைத் திருப்புகிறது.

இந்தப் பாடம் நம் வாழ்வில் தேவனுடைய வழிநடத்துதலைக் கண்டறிய அவசியமான ஆறு முக்கிய காரணிகளை விளக்குகிறது.

ஆவிக்குரிய அதிகாரத்தை விளங்கிக் கொள்ளுவதும், உபயோகிப்பதும் கிறிஸ்துவுடனான நம் சஞ்சரிப்பை திறம்படச் செய்வதற்குத் தேவையான முக்கியமான காரியங்கள். இந்தப் பாடம் ஆவிக்குரிய அதிகாரத்தின் இயல்பு மற்றும் அதன் செயல்முறை உபயோகம் பற்றிய நடைமுறைக் குறிப்புகளைக் கொடுக்கிறது.

பாடம் 12 உள்ளூர் சபைச் சூழலில் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான நடைமுறை வழிகளைக் கண்டறிய நமக்கு உதவுகிறது. இந்த விவாதம் ஊழியத்துவத்தை மையமாகக் கொண்டது என்று அறிகிறோம்.

இந்தப் பாடம் தேவ ராஜ்யத்தின் ஊழியத்திற்கு நம் சிறப்பான பங்கைக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், இந்த இலக்கை அடைவதற்கான நடைமுறை படிகளையும் வலியுறுத்துகிறது.